தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.
ரத்தக் கண்ணீர் திரைப்படம் 1954 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. அதனால் எம் ஆர் ராதா முன்னணி கதாநாயகன் ஆகி நிறையப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் எந்த பட வாய்ப்புமே வரவில்லையாம். அதற்குக் காரணம் எம் ஆர் ராதா பற்றி சினிமா உலகில் பரவிய வதந்திகள்தானாம்.
அவர் ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார், நாம் சொல்லிக் கொடுக்கும் வசனத்தைப் பேசாமல் அவர் இஷ்டத்துக்குப் பேசுவார், பல தொல்லைகள் கொடுப்பார் என்று பரவியுள்ளன. எம் ஆர் ராதாவும் தனக்கு மிகவும் பிடித்த நாடக உலகுக்கே திரும்பவும் சென்றுள்ளார்.
அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்துதான் எம் ஆர் ராதாவுக்கு பெரிய இடத்து சம்மந்தம் என்ற படவாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படத்தில் அவர் பற்றிய பொய்யான தகவல்கள் எல்லாம் உடையும் படி நடித்துக் கொடுத்து ஷூட்டிங் தொடங்கிய 50 ஆவது நாளில் படம் ரிலீஸாக முக்கியக் காரணமாக இருந்தாராம் எம் ஆர் ராதா. அதன் பின்னர் சினிமாவில் அவரின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கி அடுத்த பத்தாண்டுகள் அவர் கோலோச்சினார்.