பாக்சிங்கை விட கார் ரேஸ் ரொம்ப கஷ்டம்.. அஜித்தை பாராட்டி வீடியோ வெளியிட்ட ஒலிம்பியன் தேவராஜன்..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பொங்கல் ரேசில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அதன் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களின் சூட்டிங் மற்றும் படப்பிடிப்பு என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்து விட்ட அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்று உள்ளார். முன்னதாக சிங்கப்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் தான் மட்டும் துபாய் சென்ற நிலையில் ஷாலினி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் ரேசில் பங்கேற்பதற்காக அடுத்தடுத்த பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து கார் ரேஸில் இருந்து அஜித் விலகிய நிலையில் அவர் அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி 991 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தேசியக் கொடியை ஏந்தி உற்சாகத்துடன் அஜித் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலான நிலையில் பங்கேற்ற முதல் போட்டியிடையே இந்த சாதனையை படைத்துள்ளதால் நடிகர் அஜித்துக்கும் அவருடைய அணியினருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய பாக்சர் மற்றும் ஒலிம்பியனான தேவராஜன் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கார் ரேஸ் என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் நடிகர் அஜித் தனது அணியுடன் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பெருமைக்குரியது. அதிலும் குறிப்பாக அவர் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்ஸிங் செய்வதை விட கார் ரேஸ் ரொம்ப கஷ்டமானது என்பதை அன்னைக்கு தெரிந்து கொண்டேன். கண்ணிமைக்கும் வேகத்தில் கார் ரேஸ் நடக்கும். இதில் அஜித் கலந்து கொண்டது பெருமை. அவருக்கு குத்துச்சண்டை வீரர்கள் சார்பாகவும் இந்திய விளையாட்டு வீரர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

3 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

3 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 மணத்தியாலங்கள் ago