கோயம்புத்தூர் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் திருவள்ளூர் சிலை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உயிரிழந்து கிடந்த மூதாட்டி கேரளா மாநிலத்தை சேர்ந்த பட்டீஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் சாலையோரம் உள்ள குப்பைகளில் கிடக்கும் அட்டை பெட்டிகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து அதன் மூலமாக வரும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மூதாட்டிக்கு என தனியாக வீடு எதுவும் இல்லாததால் பகல் முழுவதும் குப்பைகளை சேகரித்து விட்டு இரவு நேரத்தில் அதே பகுதியில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். மூதாட்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் குடும்பத்தை விட்டு வெளியேறிய கேரள மாநிலம் மூங்கில் மடையை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தன்னுடைய குடும்பத்திலிருந்து வெளியேறி குப்பைகளை சேகரித்து வந்துள்ளார்.
கோவிந்தராஜனும் மூதாட்டியும் ஒரே இடத்தில் குப்பைகளை சேகரித்ததில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன் மூதாட்டி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த கோவிந்தராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…