ஜெமினி கணேசன் சிகப்பு காதல் மன்னன் என்றால்.. தமிழ் சினிமாவின் கருப்பு காதல் மன்னன் யார் தெரியுமா..?

By Ranjith Kumar

Updated on:

முதல் படமான பெண் என்ற படத்தில் தன் காதல் கவர்ச்சியை காட்டி அனைத்து கன்னிப் பெண்களின் மனதையும் கவர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள் பல படங்களில் நடித்து வெற்றியை தெறிக்க விட்டிருக்கிறார். காதல் என்றாலே ஜெமினி கணேசன் ஜெமினி கணேசன் என்றாலே காதல் என்ற மறுமொழி கூற முடியாத அளவிற்கு காதலோடு ஒத்துப் போகும். அவர் காதலுக்காகவே பிறந்த காதலுக்காகவே உயிர் விட்டிருந்தார் என்றே அனைவரும் கூறுவார்கள்

   

இவர் முதல் படமான பெண் என்ற படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த அடுத்த நிலையாக வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ப்பம், தேனிலவு, பாசமலர், தெய்வம் போன்ற பல படங்களை தமிழ் திரை உலகிற்கு பரிசளித்திருக்கிறார். இவர் துணை கதாநாயகனாகவும், துணை நடிகராகவும், சிறப்பு வருகை நடிகராகவும், பல படங்கள் நடித்திருந்தாலும், இவர் பெரும்பாலும் காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஏனென்றால் இவர் நடிக்கும் காதல் படங்கள் அவ்வளவு வர்ணிக்க கூடியதாக இருந்தவாறு மக்கள் அனைவரும் இவர் காதல் படத்தையே மிகவும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
இவர் உண்மையான பெயர் கணபதி சுப்பிரமணிய சர்மா, ஆனால் இவர் சினிமா துறைக்கு வந்த பின் பெயரை மாற்றிக் கொண்டார்.

காதல் ரசித்தை பிழியும் ஜெமினி கணேசன் அடுத்து இக்கால காதல் மன்னனான பார்த்திபன். ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, போன்ற படங்களில் பல முற்போக்குத்தனமான கருத்துக்களை வெளியில் கொண்டு வந்தாலும், அவர் படங்களில் பெண்களைப் பற்றியுள்ள காதல் காவியங்களை வர்ணிக்காமல் இருக்க மாட்டார். அவர் படங்கள் மட்டுமல்ல அவர் இயல்பு வாழ்க்கையிலும் மேடைப் பேச்சிலும் பெண்களை மையப்படுத்தி தான் பேச்சின் ஓட்டமே இருக்கும், அவர் எங்கு சென்று எதை பேசினாலும் அதில் அதிகமான பெண்ணின் தாக்கம் தான் இருக்கும், ஏனென்றால் அவர் பெண்களை அவ்வளவு காதலிப்பதாக அவர் கூறுவார், அப்படிப்பட்ட அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பொழுது செகப்பு காதல் மன்னன் ஜெமினி கணேசன், கருப்பு காதல் மன்னனோ பார்த்திபன் என்ற பெயர் இருக்கு,

அந்தப் பெயர் எப்படி உங்களுக்கு வந்ததுன்னு நீங்க நினைக்கிறீங்க, அப்படி என்று கேட்டதற்கு, நான் என்ன சில காலமா காதலிச்சு வருகிறேன், அதனால எனக்கு என்னைய ரொம்ப புடிச்சு போச்சு, நான் காதல ரொம்ப முக்கியமான நினைக்கிறேன் அதுக்கு ஒரு பெண் தேவையில்லை அந்த உடலில் இருந்தால் சில பிரச்சினைகளினால் விட்டுப் போயிடுவாங்க, ஆனா அந்த காதல் யார் மீது எப்படி வைத்தாலும் அது நம் தனிப்பட்ட உரிமை அதனால் எனக்கு காதல் மேல் அவ்வளவு பிரியம், அதுக்காக என்னமோ எனக்கு காதல் மன்னன் என்று பெயர் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் என்று நகைச்சுவையாக பேசினார்.

parthiban appeals to public to contribute generously to armed forces on flag day 001
author avatar
Ranjith Kumar