திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த குமாரி என்பவர் தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை திரும்ப கொடுக்காமல் குமாரியை நீண்ட நாட்களாக அலைக்கழித்துள்ளார். இருந்தாலும் காலதாமதமாக சிறுக சிறுக பணம் கொடுத்து சம்பத் தான் வாங்கி அசல் தொகையை முழுமையாக கட்டி உள்ளார்.
கடன் கொடுத்த தொகையை திரும்பப்பெற்ற குமாரி சம்பத்தை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வட்டி பணத்தை கேட்டுள்ளார். சம்பத் வட்டியை தன்னால் கட்ட முடியாது அசல் தொகையை விட வட்டி அதிகமாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சம்பத் மூதாட்டி வீட்டின் வாசல் படியில் இருந்த கருங்கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இது வெளியில் தெரியாமல் இருக்க மூதாட்டியின் கை மற்றும் கால்களை கட்டி அவரது உடலை சாக்கு முட்டையில் போட்டு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த மூட்டையை அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு சம்பத் தனது வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மூதாட்டியின் சடலம் கிணற்று நீரில் மிதந்த துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியாகச் சென்ற ஒரு நபர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பத் மீது சந்தேகம் வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
