கரூர் துயரம்….! “காப்பாத்துங்கன்னு கத்தினோம்… போலீஸ் கூட உதவி பண்ணல…” உயிரிழந்தவரின் உறவினர் வேதனை…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள் உள்பட  39 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உறவினர் கூறும்போது, எனது பெயர் அபிநயா. ஸ்ரீ விஜய் பேசிய இடத்திற்கு அருகே தான் நின்று கொண்டிருந்தோம். நாங்கள் விஜய்யை பார்க்கவில்லை. பார்ப்பதற்குள் எங்களை கீழே போட்டு தள்ளி விட்டார்கள். நாங்கள் கீழே விழுந்து காப்பாத்துங்க காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டோம். யாராலும் எங்களை காப்பாற்ற முடியல. எங்களால அங்கிருந்து வெளியே வர முடியல.

   

நாங்க எழுந்த பிறகு தான் எங்க பெரியம்மா மயக்கம் போட்டு விழுந்தது தெரியும். அதன் பிறகு 2,3 பேர் சேர்ந்து அவங்கள சாலைக்கு தூக்கிட்டு வந்து படுக்க வைத்தார்கள். போலீஸ்காரங்க கிட்ட சொன்னாலும் சரி சரின்னு சொல்லிட்டு போறாங்களே தவிர அவங்க எந்த உதவியும் பண்ணல. 2,3 பசங்க தான் ஆம்புலன்ஸ் கூட்டிட்டு வந்தாங்க. வேலுசாமிபுரத்திலிருந்து மருத்துவமனை வருவதற்கு ஆட்டோக்காரங்க 1500 ரூபாய் கேட்டாங்க. அந்த பணத்தை கொடுத்து மருத்துவமனைக்கு வந்தோம். அதுக்குள்ள எங்க பெரியம்மா இறந்துட்டாங்க என கூறியுள்ளார்.