தீராத கடன் தொல்லை… குடும்பத்தோடு குடியேறிய அக்கா, தம்பி… ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சோகம்… திடுக்கிடும் பின்னணி…!

By Nanthini on புரட்டாதி 28, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 34 வயதான முத்துகிருஷ்ணன் என்பவர் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய சகோதரிகளான தூத்துக்குடியை சேர்ந்த மீனாட்சி மற்றும் விருதுநகரை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் என மூவரும் கடன் தொல்லை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பகுதியில் வாடகைக்கு குடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தும் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளனர்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவருடைய சகோதரிகள் மூவரும் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.

   

இவர்களால் வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் மூன்று பேரும் தங்களது குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு வந்து குடியேறியதாகவும் கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனவிரத்தியில் இருந்த மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.