ஈரோட்டில் பேரதிர்ச்சி… பிறந்த சில மணி நேரத்திலேயே பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்…. சொந்தப் பாட்டியே செய்த பாதகம்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

பெண் குழந்தையாகப் பிறப்பதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில், பிறந்த சில மணி நேரத்திலேயே சொந்தப் பாட்டியாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் ஈரோடு மாவட்டம் பவானி சம்பவம் சமூக மனசாட்சியை உலுக்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள், போதை வெறியால் மூதாட்டிகள் வரை தொடரும் அநீதிகள் எனச் சமூகம் ஒருபுறம் சீரழிந்து வரும் வேளையில், இன்னமும் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு மாறாமல் இருப்பதையே நிகழ்வு உணர்த்துகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் விழிப்புணர்வால் வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கில், கழுத்து மற்றும் மூக்கில் காயங்களுடன் உயிரிழந்த குழந்தையின் கொலையாளி வேறு யாருமல்ல, அவளின் சொந்தப் பாட்டி தங்கமணி (47) என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் குழந்தை என்ற பாகுபாடால் இந்தத் கொடூரம் நடந்ததா அல்லது குடும்பப் பிரச்சினையா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நாடு எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், பெண் குழந்தையைச் சுமையாகக் கருதும் பிற்போக்குச் சிந்தனையும், அவர்களை வாழ விடாமல் தடுக்கும் கொடூர மனநிலையும் இன்னும் வேரறுக்கப்படவில்லை என்பதையே இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. சட்டப்பூர்வமான தண்டனைகள் ஒருபுறமிருக்க, பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், அவர்களைப் பாரபட்சமின்றி ஏற்றுக் கொள்ளவும் சமூகத்தில் ஆழமான மனமாற்றமும் விழிப்புணர்வும் உடனடியாக ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.