“அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கலாமா?”…. உதயநிதி கையில் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம்… கலக்கத்தில் தவெக…. தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த பெரும் புயல்…!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

தமிழக அரசியலில் முன்னணி தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், சட்டசபை உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மையப்படுத்தி முதல்வர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே வேளையில், தந்தை மு.க. ஸ்டாலினுடன் இணைந்து லண்டன் சென்றிருந்த அவர், தனது மகன் இன்பநிதியின் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டுச் சமீபத்தில் சென்னை திரும்பினார். குடும்ப நிகழ்வுகளை முடித்துத் திரும்பிய கையோடு, மீண்டும் தனது அரசியல் பயணத்தில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

சென்னை திரும்பிய உதயநிதி ஸ்டாலின், தமது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக இளைஞரணி குறித்து வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி தற்போது 47-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கொள்கை வழியில் மக்கள் பணிகளைக் காலத்திற்கும் களத்திற்கும் ஏற்றவாறு முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “இளைஞரணியின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?” என அவர் எழுப்பியுள்ள கேள்வி, தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, வரவிருக்கும் அரசியல் களத்தில் இளைஞரணியின் பங்களிப்பு தீவிரமாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.