CM விஜய்யை இயக்கும் சீக்ரெட் ஹேண்ட்?…. தலைமைச் செயலகத்தில் நடப்பது இதுதான்…. வெளியான பகீர் தகவல்கள்…!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகள் அனைத்தும் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் கட்டுப்பாட்டிலேயே எடுக்கப்படுவதாக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. மூத்த அதிகாரிகளின் இடமாற்றம், துறை சார்ந்த போஸ்டிங், மத்திய அரசுடனான அதிகாரப்பூர்வக் கடிதப் போக்குவரத்துகள், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வச் சந்திப்புகள் மற்றும் புதிய தொழில் முதலீடுகள் தொடர்பான திட்டங்கள் வரை அனைத்து முக்கிய கோப்புகளையும் தலைமைச் செயலாளரே நேரடியாகக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.

முதல்வருக்கு போதிய நிர்வாக அனுபவம் இல்லாத சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் ஆதிக்கமே நிர்வாகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மேலோங்கியிருப்பதாகவும், அதிகாரிகளின் முடிவுகளே அரசின் கொள்கை