எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்றில் தனது இரண்டு கைகளையும் இழந்து, கடந்த 23 ஆண்டுகளாகக் கைகளின்றி வாழ்ந்து வந்த நபர் ஒருவருக்கு மருத்துவ உலகம் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளது. சமீபத்தில் மருத்துவர்கள் குழு ஒன்று இணைந்து சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து நடத்திய தீவிர அறுவை சிகிச்சையின் மூலம், மற்றொரு நபரின் கைகளை இவருக்கு வெற்றிகரமாகப் பொருத்திப் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
23 நீண்ட வருடப் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் கைகளைப் பெற்று புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள அந்த நபரின் செய்தி இணையத்தில் வெளியாகிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாத்தியமான இந்த சாதனையைச் செய்த மருத்துவர்களைப் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் ‘பூலோகக் கடவுள்கள்’ எனப் போற்றிப் பாராட்டி வருகின்றனர்.
