தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த 17 எம்.எல்.ஏ-க்களும் இன்று சட்டப்பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
அதேசமயம், மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தத் தீவிரமாக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவை கூடும் முதல் நாளிலேயே அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…