தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்துக் கட்சிகள் இடையும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் எந்த பக்கம் செல்வது என்றே தெரியாமல் நடுவில் நின்று கொண்டிருக்கின்றார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.
அதேசமயம் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விஜய் கட்சியில் இணைந்து விடுங்கள் என்றும் கூறி வருவதாக தகவல் வெளியானது. இதனால் யாரோடு இணைய போகிறார் எனறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு ஓபிஎஸ் க்கு பாஜக அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், ஒருதரப்பினர் பாஜகவுடன் இணையக் கூடாது என்றும், மற்றொரு தரப்பினர் தற்போதை சூழலில் பாஜகவுடன் இணைவதுதான் சரி என்றும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் சற்றுநேரத்தில் கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவு எடுக்கவிருக்கிறார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜ்…
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை…
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ராஜுலா தாலுகாவின் மண்டல் கிராமத்திற்கு அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 36…
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கிரிஜா பாய் மற்றும்…