“மதியாதார் வாசலை மிதியாதே” பாஜக கூட்டணியிலிருந்து கும்பிடு போட்டு கிளம்புங்க… OPS க்கு அழுத்தம் கொடுக்கும் ஆதரவாளர்கள்..!!

By Soundarya on ஆடி 27, 2025

Spread the love

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே அமித்ஷாவும் அவரை புறக்கணித்த நிலையில், பாஜக புறக்கணிப்பை வரப்பிரசாதமாக எடுத்துக் கொண்டு, NDA கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், “பாஜகவை வளர்க்கும் எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது. தேசிய ஜனநாயக கூட்டணியே ஆபத்தான கூட்டணி.  தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என்று கூறி கும்பிடு போட்டு வெளியேறுவதே நிம்மதி என்று கூறியுள்ளார் .