மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து  மகளிர் உரிமைத்தொகை பெற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். சரியான ஆவணங்களுடன் சென்றால் 10 நிமிடங்களில் விண்ணப்பித்து விடலாம். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் நம்பர், வங்கி கணக்கு பாஸ் புக் ஆகியவற்றின் விவரங்களை சமர்ப்பித்த ஈஸியாக அப்ளை செய்து கொள்ளலாம். 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்ட குடும்பத் தலைவிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.