சுஷாந்த் போல என்னையும் கொல்ல முயற்சி… நடிகை தனுஸ்ரீ பரபரப்பு பேட்டி… அதிர்ச்சியில் பாலிவுட்..!!

By Soundarya on ஆடி 27, 2025

Spread the love

விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை தனுஸ்ரீ தத்தா. ஹிந்தியில் பிரபலமான நடிகையான இவர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்தியில் இவர் ஆசிக் பானாயா படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிகர் நானே படேகர் மீது மீ டூ புகார் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “சுஷாந்த் சிங் பாலிவுட் மாஃபியாவால் தான் கொல்லப்பட்டார் என்று இன்றும் பேசப்பட்டு வருகிறது. இதேபோல் தானும் பாலிவுட் மாஃபியாவால் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். 2018-ல் மீ டூ குறித்து பேசியதில் இருந்து தான் சொந்த வீட்டிலேயே கொடுமைப் படுத்தப்படுவதாக அவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இப்போது பாலிவுட் குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் தனுஸ்ரீ.