நள்ளிரவில் டீ போட வந்த நர்ஸ்….. ரூ.2 கோடி பிளாக்மெயில்…. மருத்துவமனை அறையில் நடந்த பகீர் சம்பவம்… பிரபல டாக்டரை அலறவிட்ட நர்ஸ்….!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் 65 வயது மூத்த மருத்துவரிடம், பணிபுரிந்த செவிலியர் ஒருவர் ரூ.2 கோடி வரை மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு இரவு நேரப் பணியில் சேர்ந்த கமலா என்ற அந்தச் செவிலியர், மருத்துவருக்குத் தெரியாமல் அவரது செல்போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை நகலெடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாகவும், பொய்யான பாலியல் வன்கொடுமைப் புகார் அளிப்பதாகவும் மிரட்டி, அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்துப் பெருந்தொகையைப் பறித்துள்ளார். பொறுமை இழந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, செவிலியர் கமலா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் உரிய ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெளியான ஒரு வீடியோ பதிவில், செவிலியர் கமலா மருத்துவருக்கு எதிராகப் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறித்த மருத்துவர் ஒரு தொடர் பாலியல் குற்றவாளி என்றும், மருத்துவமனை ஊழியர்களின் உதவியோடு சிகிச்சைக்காக வரும் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்கவே மருத்துவர் தன் மீது பொய் வழக்கைப் போட்டுள்ளதாகக் கூறியுள்ள கமலா, ஏற்கனவே இந்த மருத்துவர் மீது அளிக்கப்பட்ட புகார்கள் பணபலத்தால் மூடி மறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், செவிலியர் கமலா வீடியோவில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் வெளியாகவில்லை என்பதையும், காவல்துறை தரப்பில் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவர், தேநீர் தயாரித்துக் கொடுக்கும் சாக்கில் தனது அறைக்கு வந்து தனக்குத் தெரியாமல் புகைப்படங்களைத் திருடி, திட்டமிட்டே தன்னை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறியுள்ளார். பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் சூடுபிடித்துள்ள இந்தச் சம்பவம் குறித்துப் பார்மர் நகர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

18 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

43 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

53 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

58 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago