நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…. புறா பிடித்துத் தருவதாக கூறி 150 அடி கிணற்றில் தள்ளப்பட்ட சிறுவர்கள்… தேனியில் அரங்கேறிய பயங்கரம்…!

Spread the love

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெற்ற 3 கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன்களான ஸ்ரீஹரிஷ் (6-ஆம் வகுப்பு) மற்றும் சபரீஷ் (5-ஆம் வகுப்பு) ஆகிய இரு சிறுவர்களும் பள்ளி முடிந்து விளையாடச் சென்ற நிலையில் காணாமல் போயினர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று மாலை கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (19) என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புறா பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறிச் சிறுவர்களை அழைத்துச் சென்று, 150 அடி ஆழக் கிணற்றுக்குள் எட்டிப் பார்க்கச் சொல்லி இருவரையும் உள்ளே தள்ளிக் கொலை செய்த கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தேனி நகரின் மையப் பகுதியான பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடை தெருவில் தனியாக வசித்து வந்த ராதா (60) என்ற மூதாட்டியும் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டியின் வாய் மற்றும் கழுத்தைப் பலமாகக் கயிற்றால் இறுக்கிக் கட்டியும், தலையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ₹28 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. நகை மற்றும் பணத்திற்காக முதியவரை வீடுபுகுந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தேனி நகரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடியில் இரு சிறுவர்கள் மற்றும் தேனியில் மூதாட்டி என ஒரே நாளில் நிகழ்ந்த 3 கொடூரக் கொலைகள் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளன.

Nanthini

Recent Posts

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

11 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

14 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

30 minutes ago

“போடா டேய் பைத்தியக்காரா… அப்படியே கிழிச்சிட்டாலும்”…. வம்புக்கிழுத்த கூல் சுரேஷ்… கிழித்துதொங்கவிட்ட சீமான்….!

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…

40 minutes ago

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

51 minutes ago