மொபைல் இருந்தால் போதும்…! இனி வீட்டிலிருந்தே பான் கார்டு அப்டேட் செய்யலாம்…. எளிய வழி இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

பான் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தகவல்களில் பிழை இருந்தால் திருத்துவது இப்போது மிக எளிது. வருமான வரித் துறையின் NSDL மற்றும் UTIITSL வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.

செயல்முறை முழுவதும் டிஜிட்டல் ஆகியுள்ளது. எனவே மொபைல் அல்லது லேப்டாப் மூலம் பிழை இருந்தால் திருத்தலாம். சில படிகள் பின்பற்றினால் புதிய பான் கார்டு சில நாட்களில் கிடைக்கும்.  NSDL அல்லது UTIITSL தளத்துக்குச் செல்லவும். “PAN இல் மாற்றங்கள்/திருத்தம்” தேர்வு செய்யவும். PAN எண், பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் நிரப்பவும். 15 இலக்க டோக்கன் உருவாகும்.

   

புதுப்பிக்க வேண்டிய தகவலைத் தேர்வு செய்து சரியான விவரங்கள் உள்ளிடவும். அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பிறப்புச் சான்று, புகைப்படம், கையொப்பம் பதிவேற்றவும். கட்டணம் ஆன்லைனில் செலுத்தி சமர்ப்பிக்கவும். சமர்ப்பித்த பின் ஒப்புகை சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்.

   

ஆஃப்லைனில் “Request for New PAN Card and/or Changes or Correction in PAN Data” படிவம் நிரப்பி பான் மையத்தில் சமர்ப்பிக்கவும். பழைய பான், அடையாளம், முகவரி, பிறந்த தேதி சான்றுகள் இணைக்கவும். கட்டணம் செலுத்தி ஒப்புகை பெறவும். ஆவணங்கள் சரியாக இருந்தால் 15-20 நாட்களில் புதிய பான் கிடைக்கும். ஆவணம் குறைபாடு அல்லது தவறு இருந்தால் தாமதம் ஏற்படலாம்.