தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் விஜயும் களமிறங்கியுள்ளதால் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய்யையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.
இந்நிலையில் 2021 தேர்தலை விட 2026 ஆம் ஆண்டில் குறைந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக 25, பாமக 25, தேமுதிக 10 முதல் 15, தமாக மற்றும் சிறிய கட்சிகளுக்கு 15 தொகுதிகள் வரை வழங்க இருக்கிறதாம். இதனால் கடந்த முறை 179 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக இந்த முறை 150+தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஒருவேளை பாஜக 40 இடங்களுக்கு மேல் கேட்டால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
