அமைச்சர் மரிய வில்சன் தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது சட்டப்பேரவை உறுப்பினர் சான்றிதழை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனீபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையும் (DVAC) இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நேரடி இடமில்லாததால் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவரது அமைச்சர் பதவியை உடனடியாகப் பறிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழலை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது எம்.எல்.ஏ. சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…