நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான இந்தி படம் தேரே இஸ்க் மெய்ன் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்தது. இந்நிலையில் திரைப்பட ஒப்பந்தம் தொடர்பான ஒரு விவகாரத்தில் நடிகர் தனுஷ் முடிவு எடுக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக நடிதர் தனுஷ் இழப்பை ஈடு கட்ட வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் கோரியுள்ளது. பிற படங்களுக்கு கால்சீட் கொடுத்ததால் ருத்ரன் திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளது. கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 20 கோடி ரூபாய் வரை இழப்பை ஈடு கட்ட வேண்டும் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
