Categories: சினிமா

நீங்களே முடிவு பண்ணுங்க.. மன்னிப்பா..? ரூ.10 கோடி இழப்பீடா..? ஏ.ஆர் ரகுமானின் பரபரப்பு நோட்டீஸ்..!!

Spread the love

இந்தியாவில் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது மோசடி புகார் அளித்திருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டோம். பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக 29.5 லட்சத்தை முன்பணமாக  கொடுத்தோம்.

ஆனால் நிகழ்ச்சி நடத்தவும், இட அனுமதியும் அரசிடமிருந்து வராததால் அந்த பணத்தை திரும்ப தருமாறு கடிதம் அனுப்பினோம். அதனை ஏற்று ஏ.ஆர் ரகுமான் கொடுத்த காசோலையை சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது. எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர் ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப செலுத்தி விட்டோம். தேவையில்லாமல் ஏ.ஆர் ரகுமானின் பெயரை கெடுக்கும் நோக்கில் மோசடி புகார் அளித்துள்ளனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன் மீது போலீசில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் தன் பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகள் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.ஆர். ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

admin

Recent Posts

BREAKING: ரூ.2.44 கோடி சிக்கியது..? இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..? பெரும் பரபரப்பு.!!

பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…

3 minutes ago

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

7 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

11 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

15 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

23 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

29 minutes ago