பயணி ஏறுவதற்குள் மூடிய ஆட்டோமேடிக் கதவு…. கொட்டிய ரத்தம்… கதறிய பெண்…. கோவையில் பரபரப்பு….!

Spread the love

கோவை இருகூர் பிரிவு பகுதியில் அரசு டவுன் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால், பேருந்தில் ஏறிய பெண் பயணியின் முகம் கதவுகளுக்கிடையே மாட்டி படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கடத்திலிருந்து சோமனூர் நோக்கிச் சென்ற ’30எச்’ வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து, வெள்ளிக்கிழமை இரவு இருகூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது பின்பக்க படிக்கட்டு வழியாக வயதான பெண்கள் உள்ளிட்ட பயணிகள் ஏறிக்கொண்டிருந்த வேளையில், ஓட்டுநர் பின்புறம் பயணிகள் முழுமையாக ஏறிவிட்டனரா என்பதை கவனிக்காமல் அவசரமாக ஆட்டோமேட்டிக் கதவை மூடி, பேருந்தையும் திடீரென இயக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த எதிர்பாராத நிகழ்வால், படியில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணியின் முகம் மற்றும் மூக்குப்பகுதி கதவுகளுக்கு இடையே மாட்டி கொடூரமாக நசுங்கியது. இதில் அப்பெண்ணுக்கு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டி பலத்த காயம் அடைந்த நிலையில், பேருந்து நகரத் தொடங்கியதால் அவர் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக கூச்சலிட்டு ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை நிறுத்தச் செய்தனர். பேருந்து நிறுத்தப்பட்டதும், நடத்துநர் மற்றும் ஓட்டுநரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் பேருந்தை முற்றுகையிட்டு ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழலும் நிலவியது. இதனிடையே, விபத்துக்குள்ளான பெண்ணுக்கு பொதுமக்கள் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இந்த விபத்து மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பயணிகள் ஏறி முடிப்பதற்குள் கதவை மூடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களின் இத்தகைய ஆபத்தான நடவடிக்கை குறித்துப் பேசும் இந்த வீடியோ, அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதி செய்யப்படுகிறது என்ற கேள்வியையும், பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago