2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா கொரினா மச்சாடோவுக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கவும், சர்வாதிகாரத்திற்கு எதிரான அவருடைய போராட்டத்திற்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோரினா, எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும். எனக்கும் தொடர்ந்து உறுதியான ஆதரவை அழித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்
