தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனாவிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வியெழுப்பியதற்கு, “16வது நாள் காரியம் முடிகிற வரை யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
