தவெக கூட்டணியில் அரசு வழக்கறிஞர் பதவிகள் மற்றும் நலவாரியப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் வரையிலான பதவிகளில் தமக்குக் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களாவது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அனைத்து முக்கிய வழக்கறிஞர் பணியிடங்களும் தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கே முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே வாரியப் பதவிகளிலும் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த கூட்டணிக் தலைவர்களிடையே இந்த நடவடிக்கை மேலும் புகையத் தொடங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
