“தேர்தலில் போட்டி இல்லை, ஆனா ஒரு கண்டிஷன்”…. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த TTV தினகரன்…. அதிர்ந்து போன அரசியல் களம்….!

By Nanthini on தை 22, 2026

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்த அவர், தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தனக்குத் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமில்லை என்றும், அதற்குப் பதிலாக ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) சீட் வழங்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணைந்த தினகரன், தனது கட்சிக்கு எட்டு சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கை நிரூபிப்பதை விட, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகச் செல்வதன் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த முடிவு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.