பயத்தை உண்டாக்காதீங்க…! நாய்களை பாதுகாக்க தான் ஓட்டு போட்டோம்…. கொந்தளித்த நிவேதா பெத்துராஜ்…!!

By Devi Ramu on கார்த்திகை 24, 2025

Spread the love

சென்னையில், எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ‘ஹெவன் ஃபார் அனிமல்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தெருநாய்களைப் பாதுகாக்க வலியுறுத்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ், விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. தெரு நாய்களை வலுக்கட்டாயமாக அகற்றி காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாது.

   

இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான தீர்வு, தெரு நாய்களுக்குத் தடுப்பூசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விடுவதுதான். தெரு நாய்கள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படுத்தப்படுகிறது. ரேபிஸ் நோய் தொற்று பரவுவது குறித்து மக்கள் அச்சப்படுவதைவிட, அதற்குக் கட்டாயம் தீர்வு காண்பதுதான் சிறந்தது. மேலும், தெரு நாய்களைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும், அதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.