சற்றுமுன்: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் முக்கிய புள்ளி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சி.வி சண்முகம்..!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கட்சித்தாவலும் நடந்து வருகிறது. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டார்கள்.

கள்ளப்புலியூரை சேர்ந்த திமுக நிர்வாகியான பழனி தலைமையில் இவர்கள் அதிமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டப்பேரவை பேரவைத் தேர்தலில் சிவி சண்முகம் சண்முகம், மயிலம் தொகுதியில் களமிறங்க இருப்பதாகவும், அதற்காக அவர் அந்த தொகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.