“கைலாசா டூ தமிழ்நாடு…” தவெக அமைச்சர்களுடன் நித்யானந்தா தூதர்கள் ரகசிய சந்திப்பு?… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

Spread the love

நித்யானந்தாவின் கைலாசா நாட்டு ஆன்மீகப் பிரதிநிதிகள், தமிழகத் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களைச் சந்தித்து, இருதரப்பு ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து ஆலோசித்ததாக நித்யானந்தா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது சுவாமி நித்யானந்தா எழுதிய கைலாசாவின் வரலாற்றுப் புத்தகத்தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோருக்குப் பரிசாக வழங்கியதாகவும், இது சனாதன தர்மத்தின் மீட்சியை உணர்த்தும் புத்தகம் என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.

இருப்பினும், நித்யானந்தாவின் இந்த அதிரடிப் புகார்களுக்கு கோட்டை வட்டார அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்பு முற்றிலும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களைப் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்ற நடைமுறை உள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி அமைச்சர்களைச் சாதாரணமாகச் சந்தித்த பிரதிநிதிகள், புத்தகங்களைக் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனைத் தற்போது ஏதோ இரு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ ‘ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தை’ போல சமூக ஊடகங்களில் தவறாகச் சித்தரித்து வருவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற செயல்களில் கைலாசா அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களுக்கும் புத்தகங்களுடன் சென்று, முக்கியஸ்தர்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்வதையே அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம், நித்யானந்தாவின் கைலாசா அமைப்பிற்கும் தவெக அரசுக்கும் எந்தவித அதிகாரப்பூர்வ அல்லது ராஜாங்கரீதியான தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Visaka

Recent Posts

மாணவி செய்த காரீயம்..! மேடையில் ராகுல் காந்திக்கு திடீர் முத்தம்… கொதித்தெழுந்த பாஜக… காங்கிரஸ் அனல் பறக்கும் பதிலடி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

1 minute ago

நெஞ்சை பதறவைக்கும் திருப்பத்தூர் விபத்து…. கல்லூரி பேருந்து மீது அதிவேகமாக மோதிய தனியார் பஸ்… நூலிழையில் தப்பிய கல்லூரி மாணவர்கள்…!

திருப்பத்தூர் அண்ணாநகர் கூட்டுச் சாலையில், தனியார் பேருந்து ஒன்று கல்லூரிப் பேருந்து மீது அதிவேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.…

2 minutes ago

“இதோ நான் வந்துட்டேன்….” வெள்ளத்தில் தவித்த மனிதன்… காப்பாற்ற ஓடிவந்த யானை…! சமூக வலைதளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

ஆபத்தான வெள்ள நீரில் சிக்கி கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவரை, யானை ஒன்று கவனித்து அவரிடம்…

6 minutes ago

“ரீல்.. ரீல் கட் ஆகிடும் சார்”…. சட்டமன்றத்தில் எ.வ.வேலு செஞ்ச அந்த சைகை…. CM விஜய் ரியாக்‌ஷன் வைரல்…!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில்…

8 minutes ago

கடுமையான அதிகாரிகள்… நச்சரிக்கும் விற்பனையாளர்கள்… வெளிநாட்டவரை முகம் சுளிக்க வைத்த டெல்லி ஏர்போர்ட்… அமெரிக்கர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!

டெல்லி விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் டியூட்டி-ஃப்ரீ கடைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த டாமன் சும்ப்ரோகல் என்ற கட்டிடக் கலைஞர்…

10 minutes ago

நைட்டி போட்டது ஒரு குத்தமா?… பிக் பாஸ் காமன் மேன் மரண ரோஸ்ட்… மாயாவை பதறவிட்ட கோபி – சுதாகர்… ட்ரெண்டாகும் ட்ரோல் வீடியோ…!!

பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் காமன் மேன்' தேர்வு நிகழ்ச்சி…

16 minutes ago