தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போதைய தமிழக முதலமைச்சராகவும் விளங்கும் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் சென்சார் போர்டு முட்டுக்கட்டை மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகத் திட்டமிட்டபடி கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாமல் முடங்கியது. இதற்கிடையே, இப்படம் இணையத்தில் கசிந்ததாக (Leak) எழுந்த புகார்களால் தியேட்டரில் இதற்குப் போதிய வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிய சூழலில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இணைய கசிவுப் பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில், படத்தில் பல புதிய சுவாரசியமான காட்சிகளை இணைத்து முழுமையாக ரீ-எடிட்டிங் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த புதிய வடிவம், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம், அரசியலுக்குச் சென்றுள்ள விஜய்க்கு ஒரு மறக்க முடியாத பிரியாவிடைப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…