நானும், என் தாயும் தினமும் அழுகிறோம்… குக்கர் மூடியில எறும்பு இருந்தா கூட… நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் காரிலிருந்து தன்னுடைய 10 சவரன் நகை திருடிவிட்டதாக பேராசிரியர் ஆன நிகிதா புகார் அளித்ததன் பெயரில்தான் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலேயே வாய்மொழி உத்தரவின் பெயரில் அடித்து விசாரித்த போது தான் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பேராசிரியை நிகிதா தன்னுடைய அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பிறகு தான் அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நிகிதா தற்போது புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் தம்பி அஜித்குமார்  கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வேதனை . அவருடைய தாய் அழுதாரோ இல்லையோ நானும் என் தாயும் தினமும் அழுது கொண்டிருக்கிறோம். சம்பவத்தன்று நான் ஸ்டேஷன் போய் அறநிலையத்துறை அதிகாரிகளோடு புகார் அளித்துவிட்டு வந்து விட்டேன். வீடியோ எடுத்த சதீஸ்வரன் நாள் முழுவதும் எங்களோடு தான் இருந்தார். அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் எதுவுமே எனக்கு தெரியாது. என்ன நடந்தது என்றும் தெரியாது. முதல்வரே அஜித் குமார் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் நான் அஜித் குமாரின் தாயிடம் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்.

   

என்னை கேமராக்கள் சூழ்வதால் வெளியே வர முடியவில்லை. நான் உயிர்களை மிகவும் நேசிப்பவள். குக்கர் மூடியில் ஒரு எறும்பு ஒட்டி இருந்தால் கூட அதை மெதுவாக தள்ளிவிட்டு தான் சமைப்பேன். வாழ்வது எல்லா உயிர்களின் உரிமை. அழிப்பதற்கு உரிமை கிடையாது. எனக்கு ஐஏஎஸ் அதிகாரியை தெரியும் அவருக்கு போன் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உண்மையாகவே அக்கறை இருந்தால் இப்படி திசை திருப்பும் விதமாக செய்தி ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மீது சேற்றை வாரி இறைப்பது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத விஷயம். நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னுடைய அப்பா நேர்மையான  அதிகாரி. ஒவ்வொரு வருடமும் கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர். இதை உலகமே எதிர்த்தாலும் நான் தெரிவிப்பேன். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டத்தின் வழியே நடக்கிறோம்” என்று கூறியுள்ளார்.