கார் விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர் ஜோடா: அவர் விளையாடிய இடத்திலேயே அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்… வைரல் வீடியோ.!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

ஸ்பெயினின் மோராவில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் டியோகா ஜோட்டா(28) மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் நேற்று  உயிரிழந்தார்கள். இந்த தகவலை ஸ்பானிஷ் சிவில் காவல்துறை உறுதிப்படுத்தியது. தனது சகோதரருடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து இந்த விபத்து நடந்தது.

உலக பிரபலமான போர்ச்சுகல் மற்றும் லிவர்பூல் அணியில் விளையாடிய இவர், லிவர்பூல் அணி FA மற்றும் லீக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். விபத்தில் பலியான டியோகோ ஜோட்டாவுக்கு திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள். இந்நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர் டியாகோ ஜோடாவுக்கு அலை அலையாய் வந்து   ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இங்கிலாந்தின் Anfield-ல் உள்ள அவர் விளையாடிய Liverpool க்ளப்பின் Home மைதானத்தின் வெளியே பூங்கொத்துகளை வைத்துவிட்டுச் செல்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

   

A touch of class from this Everton fan who joined Liverpool supporters in laying tributes for Diogo Jota 👏📷 💙#Everton #Liverpool #Jota pic.twitter.com/AdB1qjakpN

 

— FOOTZONE | ENGLISH (@footzoneeng) July 3, 2025