விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல சர்ச்சைகள் வந்து கொண்டு தான் உள்ளது. தற்போது,விஜய் அவர்களின் கட்சியான தமிழக முன்னேற்றக் கழகம் டிவி கே என்று பயன்படுத்தக் கூடாது அதை மீறி பயன்படுத்தினாலும் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளதன் படி, விஜய் அவர்கள் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பெயரான தமிழக வெற்றிக்கலகம் ஆங்கிலத்தில் டிவிகே என்று அழைக்கப்படும் அக்கட்சியின் பெயர் எங்களுடையது, எங்கள் கட்சியான தமிழக வாழ்வுரிமை கழகம் என்கின்ற பெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தும் போது டிவிகே என்று இருக்கிறது. எங்கள் கட்சியின் ஆங்கில சொற்கள் போல் அவர் கட்சி உள்ளதால் அதை அவர் மாற்ற வேண்டும் இல்லை எனில் நாங்கள் தேர்தல் ஆணையதில் எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் முறையிடுவோம். இதை நாம் மாற்ற கூறு வது ஏனென்றால்,
இந்த டிவிக்கு என்று பெயரை மற்ற மாநிலத்தில் இருந்தால் எங்களுக்கு ஆட்சியப்பனையில்லை. ஆனால் நாங்கள் போட்டியிடும் களத்தில் இருக்கும் தமிழகத்தில் இதே போல் பெயரில் இருந்தால் மக்களுக்கு குழப்பமாக இருக்கும் அது மட்டுமின்றி எங்கள் தொண்டர்கள் நல்லது செய்து ஒரு சில விஷயத்தை வெளி கொண்டு வந்திருந்தால் அது விஜயின் கட்சியை சாரும், நாங்கள் 2016 ஆம் ஆண்டு எங்கள் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையம் மூலம் அறிவித்து இப்ப வரை களத்தில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறோம்,
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் சட்டரீதியாக உங்கள் கட்சியின் ஆங்கில சொற்களில் டி வி கே என்று தான் இருக்கிறதா என்று தெரிந்தவுடன், அதன்பின் தான் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் ஒருவேளை தேர்தல் ஆணையமும் உங்களுக்கு ஆங்கிலத்தில் டிவிகே என்று உங்கள் கட்சியை பதிவிட்டு சான்றிதழ் தந்திருந்தால், அதை மாற்று கோரி எங்கள் வழக்கறிஞர்களை வைத்து நாங்கள் தேர்தல் ஆணையத்தின் இடம் முறையிடுவோம்.ஆதலால் இந்த விஷயத்திற்கு ஒரு நல்ல முடிவு கொண்டு வர வேண்டும் என்று நான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கூறியிருக்கிறார்.