சூர்யா நடிக்கவேண்டிய படத்தில் நடித்த அஜித்.. தல-யின் தலையெழுத்தை மாற்றிய அந்த படம் எது தெரியுமா..

By Ranjith Kumar

Updated on:

தமிழ்நாட்டில் செல்லப்பிள்ளையான காதல் மன்னன் அஜித் குமாராக சில வருடங்கள் பயணித்து அதன் பின் அல்டிமேட் ஆக மாறி கடைசியில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தல அவர்கள் 1990 ஆம் ஆண்டு ‘என் சாஹர் என் வீடு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அஜித் , பின்னர் அவர் முதல் படமான அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

   

இதைத் தொடர்ந்து, சில தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார், பிறகு தான் ராஜாவின் பார்வையில் பவித்ரா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்கள் சரியாகப் போகாததால், விரக்தியில் சினிமாவை விட்டு விலக அஜித் முடிவு செய்தபோது, ​​இயக்குநர் வசந்த் இயக்கும் ‘ஆசை’ வாய்ப்பு அஜித்துக்கு வந்தது.ஆனால் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று அஜித் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், அவர் வான்மதி, கோலேஜ் வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி போன்ற பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் தோல்வியடைந்தாலும் சில வெற்றி பெற்றன. அதேபோல் அஜித்துக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ள அஜித் தனது பழைய பேட்டியில் , ‘ஆசை’ படம் எனக்கு வரவில்லை, முதலில் சூர்யா தான் இப்பட வாய்ப்பு வந்தது. சூர்யா  ஆசையில் முக்கிய வேடத்தில் நடிக்க அவரை அணுகியுள்ளார். அப்போது சூர்யா கார்மென்ட்ஸ் தொழில் செய்து வந்தார். எனவே வசந்த் கேட்ட போது நடிக்க மறுத்துவிட்டார்.

சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதையடுத்து, அமராவதியை பார்த்த வசந்த், அஜித் இப்படத்தின் வரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவார் என்று அவரை அணுகினார். தொடர்ந்து அவரை வைத்து படத்தை எடுத்து முடித்தார். சூர்யா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டிய போது, ​​அவர் வசந்த் இயக்கத்தில் ‘நேர்க்கு நேர்’ படத்தில் நடித்தார் என்று அஜித் கூறியுள்ளார்.

author avatar
Ranjith Kumar