தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பல சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் சட்ட ரீதியாக அனைத்தையும் கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றார். இதனிடையே விஜய் மீண்டும் எப்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி என்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல் நாயகன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக விஜய் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் டிசம்பர் மாதம் முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
