திடீர் திருப்பம்…. இபிஎஸ்-க்கு டாடா காட்டிய பிரேமலதா… முக்கிய கட்சியுடன் கூட்டணி.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் மத்திய அரசு கொண்டுவந்த SIR பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்க அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பாக நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இவர்களுடைய இந்த சந்திப்பு கூட்டணிக்காக அட்சரம் என்று பேசப்பட்ட சமயத்தில் தற்போது திடீர் திருப்பமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

திராவிட கட்சிகளுக்கு இணையாக தேமுதிகவும் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன்படி உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வரும் பரப்புரை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் நம்முடைய ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை. ஒவ்வொரு தனிநபரும் சென்று உங்கள் வாழ்க்கை உறுதி செய்யுங்கள். அதைத் திருடும் உரிமை எந்த உலகத்திலும் எவனுக்கும் இல்லை என்று கூறினார்.

   

SIR பணிகளை தீவிரமாக திமுக எதிர்த்து வரும் நிலையில் பிரேமலதாவின் இந்த பேச்சு திமுகவிற்கு ஆதரவாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்று நினைத்தபட்சத்தில் பிரேமலதாவின் இந்த பேச்சு திமுக பக்கம் தாவுவதற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கூட்டணிக்கு விஜய் மறுத்ததால் ஏமாற்றத்தில் இருந்த ஈபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து அதனை சரிகட்டி விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் பிரேமலதாவின் இந்த பேச்சு இபிஎஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.