செந்தில் பாலாஜிக்கு மீண்டும் கைது ஆபத்து?… தப்பிக்க வழியே இல்லை.. லஞ்ச ஒழிப்புத்துறை போட்ட மாஸ்டர் பிளான்…!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான ரத்தீஷ் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு சார்பில் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.