காலையிலேயே சோகம்…. கூடைப்பந்து மைதானத்தின் புயல்… தமிழகத்தின் ‘ஜான் செல்வகுமார் பாண்டியன்’ திடீர் மரணம்…. அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீரரான தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் செல்வகுமார் பாண்டியன் (67) மாரடைப்பால் காலமான செய்தி விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜூனியர் ஸ்டேட் அணியில் தனது கூடைப்பந்து பயணத்தைத் தொடங்கிய இவர், திறமையால் ஜூனியர் இந்திய அணிக்கும் தேர்வாகி அசத்தினார்.

மெட்ராஸ் பல்கலைக்கழக அணிக்காக ஐந்து முறை களம் கண்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த இவர், 1985-ஆம் ஆண்டு இந்திய ஆடவர் கூடைப்பந்து அணியில் இடம்பெற்று சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். களத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தது மட்டுமன்றி, மருத்துவத் துறையில் மயக்க மருந்து நிபுணராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜான் செல்வகுமார் பாண்டியனின் மறைவு தமிழ்நாட்டு விளையாட்டுத்துறைக்கும் மருத்துவ சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.