BREAKING: மாத உதவித்தொகை நிறுத்தம்.. அரசு அறிவித்தது…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் மாத உதவித்தொகையைப் பெற ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி கார்டுகளைக் கண்டறிந்து, பயனாளிகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது, இங்கு அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குப் பதிலாக கார்டுகளின் வகைக்கு ஏற்ப ரூ.300 மற்றும் ரூ.600 பயனாளி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, நிதி உதவி தொடர்ந்து தங்குதடையின்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டுமெனில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதாரைப் புதுப்பித்து இணைக்க வேண்டும் எனவும், தவறினால் மாத உதவித்தொகை நிறுத்தப்படும் என்றும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.