தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக குடும்பங்கள் மாதாந்திர செலவுகளை குறைக்க முடிகிறது. அதேசமயம் பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் கடைகள் மூலமாக பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நவம்பர் மாதத்திற்கான அரிசி ஒதுக்கீடு கிடங்குகளுக்கு அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்ததும் நவம்பர் மாத உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இயந்திர கோளாறு காரணமாக சில பகுதிகளில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. எனவே நவம்பர் மாத ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் இருக்கும் மக்கள் தீபாவளி முடிந்ததும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
