கல்யாணம் வேண்டாம் அது மட்டும் போதும்… சீனாவில் பெண்களிடையே பரவும் புது வகை கலாச்சாரம்..!!

By Soundarya on ஐப்பசி 18, 2025

Spread the love

திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் அது இப்பொது தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில், சீனாவில் உள்ள வசதி படைத்த பெண்கள், திருமண உறவுகளைத் தவிர்த்து, ‘கென்ஸ் எனப்படும் ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

இந்த ‘கென்ஸ்’ என்பவர்கள், வீட்டு வேலைகளான சமையல், சுத்தம் செய்தல் போன்றவற்றில் உதவுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது என்று ஒரு துணை செய்யும் அனைத்து விஷயங்களையும்  செய்கிறார்கள்.