இபிஎஸ்-க்கு ஷாக்… தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்… பாஜக சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜயை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக அதிமுக மூலமாக மீண்டும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் 234 தொகுதிகளுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி விலவங்கோடு தொகுதியின் பொறுப்பாளராக விஜயதாரணி, ஆயிரம் விளக்கு தொகுதியின் அமைப்பாளராக நடிகை குஷ்பூ, சிங்காநல்லூர் தொகுதிக்கு ஏபி முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்ட உள்ளனர். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் 234 தொகுதிகளையும் வலுப்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.