சென்னை மந்தைவெளி எஸ்பிஐ குடியிருப்பில் மெல்வின் என்பவர் வசித்து வந்தார். எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் விடுமுறை நாளான நேற்று புது ஜோடி இருவரும் மோட்டார் சைக்கிளில் கேளம்பாக்கம் அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று இருந்தனர். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு பிறகு தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற நிலையில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மெல்வினுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரி அங்கிருந்தவர்களின் உதவியுடன் கணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மெல்வின் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கண்டு மனைவி காயத்ரி கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உண்மையிலேயே மெல்வின் மறைவுக்கு மாரடைப்புதான் காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…
திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் தனது முழு…
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு…
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பெரிய பணத் தேவைகளின் போது, நமது சேமிப்பு கை கொடுக்காத பட்சத்தில், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம்…