நெல்லையில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துமாலை (35) என்ற பெண், இரு மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது 5 வயது பெண் குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். தனது தாயைக் கண் முன்னே துடிதுடிக்கக் கொலை செய்ததைக் கண்டு உறைந்துபோன அந்தச் சிறுமியின் அழுகுரல், அக்கம் பக்கத்தினரை உலுக்கியுள்ளது.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

56 seconds ago

அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…

2 minutes ago

உயிருடன் இருக்கும் கிரிக்கெட் வீரருக்கு இரங்கல்.. இன்ஸ்டாகிராம் மொழிபெயர்ப்பு செய்த விபரீதம்..! உண்மையான பின்னணி என்ன..?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…

2 minutes ago

“ரூ.2500 காசு கொடுக்க யோசிக்கிறீங்க.. ஆனா இதை மூடலாமா?”… மாஸ் காட்டிய விஜய்க்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேட்ட ஷாக் கேள்வி…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…

13 minutes ago

இன்று உஷாரா இருக்க வேண்டிய ராசிகள் எது தெரியுமா..? தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க…!

மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…

21 minutes ago