அடப்பாவிகளா..! உயிருடன் இருக்கும் கிரிக்கெட் வீரருக்கு இரங்கலா.. இன்ஸ்டாகிராம் மொழிபெயர்ப்பு செய்த விபரீதம்..!

Spread the love

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் வதந்தியாகும். அவர் நலமாக உள்ளார் என்றும் அவரது மரணம் குறித்த போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் குழப்பத்திற்கு முக்கியக் காரணம், ஆப்கானிஸ்தான் அணியின் மற்றொரு கிரிக்கெட் வீரரான கரீம் ஜனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஷ்தூ (Pashto) மொழியில் பகிர்ந்த இரங்கல் பதிவே ஆகும். ரஹ்மத் ஷாவின் தாயார் மறைந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவே கரீம் ஜனத் அந்தப் பதிவைப் போட்டிருந்தார். ஆனால், இன்ஸ்டாகிராமில் செய்யப்பட்ட தவறான மொழிபெயர்ப்பு காரணமாக, ரஹ்மத் ஷாவே இறந்துவிட்டார் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டனர்.

கூகுள் மொழிபெயர்ப்பின் மூலம் அந்த அசல் பதிவைச் சரிபார்த்தபோதுதான் உண்மை வெளிவந்தது. “தேசிய கிரிக்கெட் அணியின் திறமையான வீரரான ரஹ்மத் ஷாவின் மரியாதைக்குரிய தாயார் இயற்கை எய்திய செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்” என்பதே கரீம் ஜனத்தின் உண்மையான பதிவாகும். கிரிக்கெட் வீரரின் புகைப்படத்துடன் இந்த இரங்கல் செய்தி பகிரப்பட்டதால், ரசிகர்கள் விவரம் தெரியாமல் அதை வைரலாக்கி, ரஹ்மத் ஷாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

1 மணத்தியாலம் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

1 மணத்தியாலம் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

1 மணத்தியாலம் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago