தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இப்படியான நிலையில் திமுக அணிகளில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர்களாக ராபர்ட், ராஜேஷ் ஜெயின், பொன் சீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நெசவாளி அணி துணைச் செயலாளராக சரவணன், மருத்துவ அணி இணைச் செயலாளராக அண்ணாமலை, காஞ்சி வடக்கு அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவராக ஏஎன் லட்சுமிபதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…
பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சலூன் மேலாளராகப் பணியாற்றி வந்த ரத்னா சிங் (31) என்ற பெண் தற்கொலை செய்து…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…
மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…