அவிநாசியில் திருமணமான 78 நாள்களில் ஆடியோ வெளியிட்டு இளம்பெண் ரிதன்யா (27) என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆசையாக வளர்த்த மகளை வரதட்சணை கொடுமையால் பறிகொடுத்துவிட்டோம் என அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். அதன் வடு மறைவதற்குள் பொன்னேரியில் கடந்த 27-ம் தேதி திருமணமான லோகேஸ்வரி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான நான்காவது நாளிலேயே இளம்பெண் லோகேஸ்வரி(27) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பன்னீர்(37) மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் அடுத்தடுத்து திருமணமான இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
