ஹீரோன்னு சொல்லி டம்மி பண்ண டிஆர்.. மறக்கவே முடியாத கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சிவக்குமார்..!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

ஒரு கலைஞர் தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும் கசப்பான அனுபவங்களும் கூட ஒருவகையில் அவருக்கு பாடமாக அமைந்து அவரை மெருகேற்றுகின்றன. அப்படி ஒரு அனுபவம் டி ராஜேந்தர் உடன் சிவகுமாருக்கு நடந்துள்ள நிலையில் அதனை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து உள்ளார். அதாவது டிஆர் ஒரு பெரிய மேதை என்றும் கே.எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு ஒரு ஸ்கிரிப்ட் பேப்பர் கூட இல்லாமல் ஒரு முழு திரைப்படத்தையும் இயக்கும் திறமை அவரிடம் இருந்தது என்றும் சிவகுமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இன்றைய காதல் டா' அவ்ளோதானா? அடுத்த படத்தில் இசைக் கலைஞர் ஆகிறார்  டி.ராஜேந்தர் | T.Rajendhar to play musician in his next - Tamil Filmibeat

   

மேலும் அவரது திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் சில சமயம் அவரது முடிவுகள் மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. டிஆரின் ஒரு படத்தில் நடிக்க சிவகுமார் ஒப்புக்கொண்ட போது நீங்கள் தான் ஹீரோ என்று அவரிடம் உறுதிமொழி அளித்த டி ஆர் படம் முடிவடையும் தருவாயில் டிஆரின் மகன் சிம்புவின் வளர்ச்சி காரணமாக கதை மாற்றப்பட்டு முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஸ்கிரிப்ட் கையில் இல்லாததால் டிஆர் தனது பகலின் கதாபாத்திரத்தை மேம்படுத்தி தனது கதாபாத்திரத்தை டம்மியாக்கிவிட்டார் என சிவகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

   

நடிகர் சிவகுமார் சினிமாவை விட்டு விலக அந்த நடிகை தான் காரணமா? வெளியான  பரபரப்பு தகவல்..!

 

மேலும் ஹீரோவாக நடித்தவர் இடைவேளைக்கு பிறகு தான் வருவது போல கதை மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. உங்களை ஹீரோன்னு சொல்லி போட்டு வேற ஒருவர் வரார் சார் என்று ஒரு ரசிகர் அழுது இருக்கிறார். மேற்கண்ட கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் டி.ஆர் ஒரு பெரிய மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல திறமைகளை கொண்ட அவர் தனித்துவமான ஒரு கலைஞராக இன்று நிலைநிறுத்தி வருகின்றார். ஒரு கலைஞரின் பயணத்தில் இது போன்ற சவால்களும் மாற்றங்களும் தவிர்க்க முடியாதது என்று சிவகுமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.